தொடர்புடைய செய்திகள்
- திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் விபரீத முடிவு!
- நீட் தேர்வை ரத்து.. மாணவர்களிடம் கட்டாய கையெழுத்தா? நீதிமன்றத்தில் முறையீடு..!
- நீட் தேர்வுக்கு கையெழுத்து இயக்கம் நடத்துவது மக்களை ஏமாற்றும் வேலை... ரஜேந்திரபாலாஜி
- ’’நீட் தேர்வு இல்லா தமிழ்நாட்டை உருவாக்க நாள்தோறும் போராடுவோம்!‘’- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- எதற்கெடுத்தாலும் திமுகவை குற்றம் சொல்லும் சிலரை திருத்த முடியாது; அமைச்சர் மனோ தங்கராஜ்
நீட் பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை.. கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம்..!
நீட் தேர்வு பயம் காரணமாக ஏற்கனவே தமிழகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் என்ற பகுதியைச் சேர்ந்த மாணவி பைரவி என்பவர் கடந்த சில மாதங்களாக நீட் பயிற்சி பெற்று வந்த நிலையில் அவர் திடீரென விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று முன்தினம் விஷம் அருந்திய நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் பலனின்றி பைரவி என்ற உயிரிழந்தார். நீட் தேர்வு அச்சம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஒரு பக்கம் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற போலியான வாக்குறுதிகள் அரசியல்வாதிகளால் கொடுக்கப்படும் நிலையில் இன்னொரு பக்கம் அந்த வாக்குறுதியை நம்பி மாணவ மாணவிகள் தங்கள் இன்னுயிரை இழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
