தொடர்புடைய செய்திகள்
- கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்.! வேட்பாளர்களை தேர்வு செய்யுங்கள்.!! எடப்பாடி பழனிச்சாமி..!!!
- அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவின் தீர்ப்பு தேதி: கடைசி வாய்ப்பா?
- தேர்தலால் பொதுத் தேர்வு தேதிகளில் மாற்றம் இருக்குமா? அமைச்சர் அன்பில் மகேஷ்
- பொன்முடி மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை தேதி அறிவிப்பு..!
- மழையால் ஒத்திவைக்கப்பட்ட அண்ணாமலை பல்கலை தேர்வு தேதி அறிவிப்பு..!
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு..!!
2024ஆம் ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET PG) ஜூலை 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த தேர்வு மார்ச் 3ஆம் நடைபெற திட்டமிடப்பட்டது. தேர்வு தேதியை ஒத்திவைக்க மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து தேர்வு தேதி மாற்றம் குறித்து தேசிய தேர்வு வாரியம் தேர்வை ஒத்தி வைத்த நிலையில் தற்போது புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.,
முந்தைய தேர்வு தேதியை மாற்ற பல்வேறு மாணவர் அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. நீட் பிஜி தேர்வுக்கு தயாராக போதுமான நேரம் இல்லை என மாணவர்கள் வாதிட்டனர். மாணவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தற்போது தேதி மாற்றப்பட்டுள்ளது.
தேர்வு தேதி மாற்றப்பட்டதால், தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தங்கள் தயாரிப்பு முறையில் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம். தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை குறித்து முழுமையாக அறிந்து கொள்ளலாம். முந்தைய ஆண்டு தேர்வு வினாத்தாள்களை பயிற்சி செய்ய கொள்ள கூடுதல் கால அவகாசம் இருக்கும்.
Edited by Mahendran
