புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 ஜனவரி 2024 (10:15 IST)

மழையால் ஒத்திவைக்கப்பட்ட அண்ணாமலை பல்கலை தேர்வு தேதி அறிவிப்பு..!

Annamalai University
தமிழ்நாட்டின் ஒருசில பகுதிகள் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் மழையால் ஒத்திவைக்கப்பட்ட அண்ணாமலை பல்கலை தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது. மிக்ஜாம் புயல் மற்றும் அதை தொடர்ந்த தென் மாவட்ட அதி கனமழைக்கு பிறகு பெரும்பாலும் குறைவான அளவே மழை பெய்து வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

 
குறிப்பாக  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், புதுச்சேரி என பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள உறுப்பு கல்லூரிகளில் நேற்று நடைபெற இருந்த அனைத்து தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன என்பதும், தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் 11ம் தேதி நடைபெறும் என அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேல் தகவல் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran