வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 9 ஜனவரி 2024 (14:23 IST)

தேர்தலால் பொதுத் தேர்வு தேதிகளில் மாற்றம் இருக்குமா? அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு ஏற்கனவே பொது தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தேதிகளை ஒட்டி நாடாளுமன்ற தேர்தல் தேதி வந்தால்  பொது தேர்வு தேதிகள் மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார்.  
 
அமைச்சர் அன்பில் மகேஷ் இதுகுறித்து கூறிய போது 10, 11, 12 ஆம் வகுப்பு பொது தேர்வு தேதிகளில் மாற்றமில்லை என்றும் பொது தேர்வு பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டு அதற்கு ஏற்றார் போல் தான் மக்களவைத் தேர்தல் தேதி இருக்கும் என்றும் தெரிவித்தார். 
 
எனவே தமிழகம் உள்பட  மற்ற மாநிலங்களில் நடைபெறும் பொது தேர்வு தேர்தலை ஆய்வு செய்துதான் இந்த நாடாளுமன்ற தேர்தல் தேதியை தேர்தல்  ஆணையம் அறிவிக்கும் என்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே 10, 11, 12 வகுப்புக்கான தேர்வு தேதி  மாற்றம் இருக்காது என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva