தொடர்புடைய செய்திகள்
- கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு
- நீட் தேர்வு எழுத அமைச்சர் மா சுப்பிரமணியம் தயாரா? அண்ணாமலை
- ரேசன் கடையில் நிவாரண பொருட்கள் பெற கூடுதல் அவகாசம்: தமிழக அரசு அறிவிப்பு!
- ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மீண்டும் கால அவகாசம்: தமிழக அரசு உத்தரவு!
- நீட் தேர்வு ரத்து இல்லை: திமுக எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு!
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 6ஆம் தேதி கடைசி தேதி என நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த ஆண்டு நீட் தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வுக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது
ஆனால் தற்போது ஆகஸ்ட் 10ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இதனையடுத்து ஆகஸ்ட் 10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
அடுத்த கட்டுரையில்
