1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (16:05 IST)

நீட் தேர்வு எழுத அமைச்சர் மா சுப்பிரமணியம் தயாரா? அண்ணாமலை

தேர்தலுக்காக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிவிட்டு தற்போது நீட் தேர்வுக்கு தயாராகுங்கள் என மாணவர்களை கூறும் அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் நீட் தேர்வு எழுதி பாஸ் செய்ய தயாரா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகத்தில் திமுக ஆட்சி ஏற்பட்ட உடன் முதலில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால் நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் நீட்தேர்வு தாக்கம் குறித்து குழு ஒன்றை அமைத்த தமிழக அரசும் அதன் அறிக்கை மீதும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுத்தது போல் தெரியவில்லை
 
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற அண்ணாமலை தேர்தலுக்காக நீட் தேர்வு ரத்து என்று கூறிவிட்டு தற்போது நீட்தேர்வு நடத்துவோம் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது மாணவர்களை குழப்பம் அடையச் செய்கிறது. அமைச்சர் சுப்பிரமணியம் முதலில் நீட் தேர்வு எழுதி பாஸ் செய்யட்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்