1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (21:18 IST)

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது. இன்றுடன் கால அவகாசம் நிறைவடையும் நிலையில், ஊரடங்கை கருத்தில் கொண்டு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது
 
இதன்படி குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மை ஏற்றம் தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்காக இணைய சேர்க்கை வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது 
 
மேற்காணும் திட்டத்தில் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த தேதி வரை 73,086 விண்ணப்பங்கள் இணைய வழியில் பெறப்பட்டுள்ளன
 
தற்போது கொரோனா வைரஸ் பொதுமுடக்கத்தை கருத்தில் கொண்டு இணைய வழியில் விண்ணப்பித்தல் செய்வதற்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் 13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இவ்வாறு மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் தெரிவித்துள்ளார்