ஞாயிறு, 15 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 5 பிப்ரவரி 2026 (11:02 IST)

லிப்டில் வெடித்த ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட பலூன்கள்.. லிப்டில் இருந்த 3 பேருக்கு என்ன ஆச்சு?

லிப்டில் வெடித்த ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட பலூன்கள்.. லிப்டில் இருந்த 3 பேருக்கு என்ன ஆச்சு?
மும்பை கோரேகான் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் லிப்டில், எரிவாயு நிரப்பப்பட்ட பலூன்கள் வெடித்து சிதறி தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண் மற்றும் இரு ஆண்கள் லிஃப்டிற்குள் சென்றபோது, அவர்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக் பையிலிருந்த பலூன்கள் திடீரென வெடித்தன. அடுத்த சில நொடிகளில் லிஃப்ட் முழுதும் தீப்பந்தமாக மாறியது.
 
அதிர்ஷ்டவசமாக, லிஃப்ட் கதவுகள் திறந்தவுடன் மூவரும் விரைவாக வெளியேறியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், இருவர் லேசான தீக்காயங்களுக்கு உள்ளாகினர். 
 
விசாரணையில், அந்த பலூன்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய 'ஹைட்ரஜன்' வாயு நிரப்பப்பட்டிருந்தது தெரியவந்தது. சிறிய உராய்வு அல்லது மின்சாரம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 
 
மூடிய இடங்களில் இத்தகைய அபாயகரமான பொருட்களை கொண்டு செல்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது. குடியிருப்பு சங்கங்கள் இது போன்ற பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
 
Edited by Siva