புதன், 18 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 4 பிப்ரவரி 2026 (16:22 IST)

9வது மாடியில் இருந்து குதித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் தற்கொலை.. கடிதத்தில் என்ன இருந்தது?

9வது மாடியில் இருந்து குதித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் தற்கொலை.. கடிதத்தில் என்ன இருந்தது?
உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுமிகள் ஒன்பதாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 
 
16 வயது , 14 வயது மற்றும் 12 வயது கொண்ட மூன்று சகோதரிகள், தாங்கள் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதாவது மாடியில் இருந்து நள்ளிரவு 2 மணி அளவில் அடுத்தடுத்து கீழே குதித்துள்ளனர். இந்த கோர விபத்தில் மூன்று பேருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், இந்த சிறுமிகள் மூவரும் ஒரு ஆபத்தான 'கொரியன் ஆன்லைன் கேமிற்கு' அடிமையாக இருந்தது தெரியவந்துள்ளது. அந்த விளையாட்டின் சவால்களை நிறைவேற்றும் நோக்கில், விளையாட்டின் கட்டளைப்படி அவர்கள் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 
 
உயிரிழப்பதற்கு முன் அவர்கள் எழுதி வைத்துள்ள தற்கொலை கடிதத்தை கைப்பற்றியுள்ள போலீசார், அதன் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகள் பல உயிர்களை பறித்துள்ள நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறிமிகள் உயிரிழந்திருப்பது  இணையதளப் பயன்பாட்டில் உள்ள பேராபத்தை மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டியுள்ளது. 
 
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆன்லைன் செயல்பாடுகளை கண்காணிப்பது அவசியம் என்பதை இச்சம்பவம் வலியுறுத்துகிறது.
 
Edited by Siva