செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்ததால் 3 சிறுமிகள் தற்கொலை!.. ஐயோ பாவம்!...
எப்போது எல்லோரின் கையிலும் செல்போன் வந்ததோ அப்போதே அந்த செல்போனுக்கு பலரும் அடிமையாகி விட்டனர். குறிப்பாக குழந்தைகள், பள்ளிக்கு செல்லும் சிறுவர் சிறுமிகள் என பலருமே செல்போனுக்கு அடிமையாகி வருகிறார்கள். அதிலும் நிறைய குழந்தைகள் கேம் விளையாடுவதற்கு அடிமையாக மாறியிருக்கிறார்கள்.
இந்நிலையில்தான், செல்போனில் கேம் விளையாடுவதை கண்டித்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுமிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது..
உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் வசித்து வந்த ஒருவருக்கு பக்தி(12), பிராச்சி(14), விஷிகா(16) என மூன்று பெண் குழந்தைகள் இருந்தனர்.. பள்ளி செல்லும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் செல்போனில் கொரியன் கேம் விளையாடுவதை பழக்கமாக கொண்டிருந்தனர். குறிப்பாக ஒரு கொரியன் கேமுக்கு அவர்கள் அடிமையாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
வீட்டில் எப்போதும் செல்போனை வைத்துக் கொண்டு மூவரும் கேம் விளையாடிக்கொண்டே இருந்தனர். எவ்வளவு அறிவுரை சொல்லியும் அவர்கள் கேட்காததால் இனிமேல் விளையாட கூடாது என பெற்றோர்கள் அவர்களுக்கு தடை விதித்து விட்டதாக தெரிகிறது.. இதை தாங்கிக் கொள்ள முடியாத அந்த மூன்று சிறுமிகளும் பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள்..
சிறுமிகளில் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது சிறுமிகள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அதன்பின் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.. ஆனால் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். செல்போனில்
கேம் விளையாடுவதை தடுத்ததால் சிறுமிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது..