1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 12 ஜூலை 2021 (18:09 IST)

அக்டோபர் - நவம்பர் மாதங்களில் 3 ஆம் அலைக்கு அதிக வாய்ப்பு!

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், அடுத்த அலை வரக்கூடும் என  இந்திய மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.
 
மக்கள் விதிகளை பின்பற்றாமல் கூட்டம் கூடுவது கொரோனா 3ம் அலைக்கு வாய்ப்பை ஏற்படுத்தும் எனவும்  கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் பொது இடங்களில் அதிகளவில் மக்கள் கூடுவதாக ஐ.எம்.ஏ வேதனை தெரிவித்துள்ளது. இதனால் மூன்றாம் அலைக்கு அதிகம் வாய்ப்புள்ளது எனவும் ஐ.எம்.ஏ எச்சரித்துள்ளது. பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஐ.எம்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளது.