திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: திங்கள், 12 ஜூலை 2021 (11:16 IST)

தமிழ்நாடு புதுச்சேரி இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்!

தமிழகத்தில் இருந்து 70 நாட்களுக்குப் பிறகு புதுச்சேரிக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலால் முடக்கப்பட்ட பொது போக்குவரத்து இப்போது படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது. முதலில் நகர்ப்புற பேருந்துகள் இயக்கப்பட்டு பின்னர் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து இயக்கப்பட்ட நிலையில் இப்போது புதுச்சேரிக்கும் பேருந்து இயக்கப்பட்டுள்ளது. 70 நாட்களுக்கு பிறகு கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு பேருந்துகள் இன்று இயக்கப்பட்டன.