1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Modi, Yogi aadhar information changed by bihar man arrested

பிரதமர், முதல்வர் ஆதார் விவரங்களை மாற்றி மோசடி.. மர்ம நபர் கைது..!

aadhar
பிரதமர் மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர்களின் ஆதார் விவரங்களை மாற்றி மோசடி செய்ய முயற்சித்ததாக மர்ம நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பிரதமர் மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர்களின் ஆதார் விவரங்களை மாற்ற முயற்சித்ததாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மதன் குமார் என்பவரை குஜராத் மாநில போலீசார் கைது செய்துள்ளனர். 
 
பிரதமர் மோடி மற்றும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆதார விவரங்களை மாற்றி அமைத்து அதனை வைத்து முறைகேடு செய்துள்ளதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 
 
இதனை அடுத்து அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் இதுபோன்ற வேறு யாராவது விஐபிகளின் ஆதார் விவரங்களை அவர் மாற்றி உள்ளாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: 3 நாட்களில் 36 லட்சம் விண்ணப்பங்கள்..!