திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 26 ஜூலை 2023 (13:44 IST)

வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் வண்டு

vande bharath
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

சமீபத்தில், ஹிமான்ஷூ முகர்ஜி என்ற பயணி தன் சமூக வலைதள பக்கத்தில், வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவு பற்றி புகார் ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் வண்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த இந்திய  ரயில்வே, இந்த தவறுக்கு மன்னிப்புக் கோரியதுடன் இனிமேல் உணவு தயாரிப்பின்போது கவனமுடன் இருப்பதாக கூறியுள்ளதாக தகவல் வெளியாகிறது.