வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 27 ஜூலை 2023 (08:50 IST)

அனைவரும் தமிழிலே கையொப்பமிட வேண்டும்; பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு!

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அனைவரும் தமிழிலேயே கையொப்பமிட  வேண்டும் என பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும், அனைவரும் தமிழில் தான் கையெழுத்திட வேண்டும் என்றும் ஆவணங்கள் வருகை பதிவு மற்றும் மாணவர்களையும் தமிழில் கையொப்பமிட அறிவுறுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சற்று முன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  
 
டிபிஐ வளாகம் தொடங்கி கடைநிலை அலுவலகம் வரை அனைத்து இடங்களிலும் பெயர் மற்றும் விவரங்களை தமிழில் தான் கையொப்பமிட வேண்டும் என்றும்  அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார் 
 
2021 ஆம் ஆண்டு இது குறித்த அரசாணையையும் பள்ளிக்கரத்துறை இயக்குனர் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இனிவரும் நாட்களில் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் அனைவரும் தமிழில் தான் கையெழுத்து விடுவார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva