செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 26 டிசம்பர் 2019 (11:14 IST)

கிரகணத்தை பார்க்க முடியவில்லை! – பிரதமர் மோடி வருத்தம்

இந்தியாவின் பல பகுதிகளில் மக்கள் சூரிய கிரகணத்தை கண்டு ரசித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இதுகுறித்து தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இன்று நெருப்பு வளைய சூரிய கிரகணம் இந்தியாவெங்கும் மக்களால் காணப்பட்டது. இந்த அரிய நிகழ்வை பிரதமர் மோடியும் அவரது இல்லத்திலிருந்து காண முயன்றபோது மேகங்களின் குறுக்கீட்டால் கிரகணத்தை காண முடியவில்லை.

இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள அவர் ”எல்லா இந்தியர்களை போலவும் சூரிய கிரகணத்தை காண நான் உற்சாகமாக இருந்தேன். துரதிர்ஷ்டவசமாக மேகங்களின் குறுக்கீட்டால் என்னால் சூரியனை காணமுடியவில்லை. ஆனால் கோழிக்கோடு மற்றும் சில பகுதிகளில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட நெருப்பு வளைய காட்சியை கண்டேன். மேலும் இதுகுறித்து அறிவியல் அறிஞர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்” என கூறியுள்ளார்.