1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Solar Eclipse starts now

தெரிய தொடங்கியது சூரிய கிரகணம்..

சூரிய கிரகணம்
நெருப்பு வளைய சூரிய கிரகணம் தற்போது தெரிய தொடங்கியுள்ளது.

30 ஆண்டுகளுக்கு பிறகு பின் நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் ஊட்டியில் பாதியளவு தெரிய தொடங்கியது. மேலும் கோவை, ஈரோடு, திருப்பூர், ஆகிய மாவட்டங்களில் 93% தெளிவாக தெரிய ஆரம்பிக்கும். ஆனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பகுதி அளவிலே தெரியும் எனவும் கூறப்படுகிறது.

காரைக்குடி, சிவகங்கையில் 2 நிமிடங்களும்,  திண்டுக்கலில் 2 நிமிடங்கள் 50 வினாடிகளும், கோவை, ஈரோட்டில் 1 நிமிடம் 24 வினாடிகளும், மதுரையில் 2 வினாடிகள் மட்டுமே தெரியக்கூடும் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சென்னையில் காலை 9.34 மணியளவில் சூரிய கிரகணம் பகுதி அளவில் தெரியும் என கூறப்படுகிறது.

எனினும் இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்த்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
About Writer
Arun Prasath
அடுத்த கட்டுரையில்
15 % வருகை.... 0 கேள்வி -நாடாளுமன்றத்தில் என்ன செய்கிறார் அன்புமணி ராமதாஸ் ?