செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 26 டிசம்பர் 2019 (10:41 IST)

கோவை மக்களை ஏமாற்றிய மேகங்கள்..

நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரிந்த நிலையில் கோவையில் மேக மூட்டம் காரணமாக மக்கள் பார்க்கமுடியவில்லை

வானில் அரிய நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் தமிழகத்தில் இன்று காலை தெரிய தொடங்கியது, சூரியனை நிலவு படிபடியாக மறைத்து பின்பு சூரியனின் நடுப்பகுதியை 93% மறைத்தது. இதனால் சூரியன் நெருப்பு வளையம் போல் தோன்றியது.

தமிழகத்தில்  கோவை, ஈரோடு, திருப்பூர், ஆகிய மாவட்டங்களில் 93% தெளிவாக தெரிய ஆரம்பிக்கும். ஆனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பகுதி அளவிலே தெரிய வந்தது. மேலும் தென் இந்தியாவின் கேரளா மாநிலம் பாலக்காடு, கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஓரளவு தெரிய ஆரம்பித்தது.

இந்நிலையில் கோவையில் மேகமூட்டம் காரணமாக நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை மக்கள் காணமுடியாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் தேனி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளும் சூரிய கிரகணம் தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது.