செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 26 டிசம்பர் 2019 (09:20 IST)

”இந்தியாவில் உள்ள அனைவருமே ஹிந்துக்கள் தான்.. ”ஆர்.எஸ்.எஸ். தலைவர் பகீர்

இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் இந்து சமூகத்தினர் தான் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தீவிர ஹிந்து அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஹிந்துக்களை ஒன்றிணைக்ககூடிய இயக்கம் எனவும் ஹிந்துக்களுக்கு ஆதரவளிக்கும் இயக்கம் எனவும் கூறப்படுகிறது. எனினும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சிறுபான்மையினர்களை முக்கியமாக இஸ்லாமியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர் எனவும், இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு அப்புறப்படுத்தி ஹிந்து ராஜ்ஜியத்தை அமைக்க விரும்புகின்றனர் எனவும் பல வருடங்களாக புகார்கள் எழுந்துவருகிறது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சார்பாக நடைபெற்ற விழாவில் பேசிய மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களையும் ஹிந்து சமூகமாகவே பார்க்கிறது. இந்தியாவை தாய் நாடாக கொண்ட, இந்தியாவை நேசிக்கிற ஒருவர், வேறு மதத்தை சேர்ந்தவரானாலும், அல்லது எந்த மொழி பேசினாலும் அவர் இந்திய தாயின் மகனே. அவர்கள் அனைவரும் ஹிந்துக்களே” என கூறியுள்ளார்.