புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : புதன், 18 செப்டம்பர் 2019 (19:04 IST)

”வயசானாலும், அந்த அழகும் ஸ்டைலும் மாறவேயில்லை” பாட்டிகளுக்காக நடந்த அசத்தலான அழகி போட்டி

இந்திய அளவில் நடந்த பாட்டிகளுக்கான அழகிப் போட்டி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் பாட்டிகளுக்கான அழகிப் போட்டி நடைபெற்றது. இந்திய அளவில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த போட்டியில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, பஞ்சாப், மும்பை மாநிலங்களிலிருந்து பாட்டிகள் பங்கேற்றனர்.

பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இந்த போட்டியில், சிறந்த சிகை அலங்காரம், உடல் அமைப்பு உள்ளிட்ட பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இது குறித்து இந்த போட்டியின் ஒருங்கிணைப்பாளரிடம் கேட்ட போது, ”அழகு என்பது வெளிப்புற தோற்றம் அல்ல, அது தன்னம்பிக்கைகான தோற்றம். அதனை உணர்த்தவே இந்த போட்டி” என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.