அடுத்து ஒரே நாடு ஒரே கட்சியா? – ஸ்கெட்ச் போடும் பாஜக!?
பல கட்சி ஜனநாயக முறை வலுவிலந்துவிட்டதாக அமித்ஷா தெரிவித்துள்ளது பாஜகவின் அடுத்த திட்டத்துக்கான முன்னோட்டமோ என அரசியல் வட்டாரங்களில் பரபரப்ப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் ஊழல்கள் குறித்தும், தற்போது பாஜக திடமாக எடுத்த முடிவுகள் குறித்தும் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் ”உலகின் பல்வேறு நாடுகளின் ஜனநாயக முறையையும் ஆய்வு செய்து இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறையை கொண்ட அரசியலமைப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் மக்களுக்கு பல கட்சி ஜனநாயக முறை மேல் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது” என்று கூறியுள்ளார்.
அவரது இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல, பொதுமக்களிடையேயும் பரவலான சர்ச்சை விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர காலக்கட்டம் முதலே மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்த காங்கிரஸ் தற்போது தன் செல்வாக்கை இழந்திருக்கிறது. சரியான தலைமை இல்லாமல் காங்கிரஸ் திண்டாடி வரும் இந்த சூழலை பயன்படுத்தி கொண்ட பாஜக முன்னாள் ஊழல் கோப்புகளை தூசித்தட்டி எடுத்து காங்கிரஸின் மாநில வாரியான முக்கிய தலைவர்களை களையெடுத்து வருகிறது.
மேலும் சின்ன சின்ன இந்து மத கட்சிகள் பலவும் பாஜகவுடன் இணைய தயராய் இருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் மற்றும் மற்ற மாநில கட்சிகளில் உள்ள அரசியல்வாதிகள் பலரும் நாளடைவில் பாஜகவில் இனைந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஒருவேளை பாஜக ஒரே நாடு ஒரே கட்சி என்ற முடிவை எடுக்க இருக்கிறதோ என பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த சந்தேகத்திற்கு வேகம் கொடுப்பதுபோல அமித்ஷாவின் இந்த பேச்சும் அமைந்துள்ளது.
ஆனால் இதுவரை ஒரே கட்சி கொண்ட ஜனநாயக நாடு என்று உலகில் எதுவும் இல்லை. ஒரே ஒரு கட்சி மட்டும் இருந்தால் அது சர்வாதிகாரத்துக்குதான் வித்திடும். எனவே பாஜக முடியரசு நாடுகளான அமெரிக்கா, கனடா போல இருகட்சி ஜனநாயக ஆட்சி முறையை கொண்டு வர திட்டமிடுகிறதோ எனவும் பேசிக்கொள்ளப்படுகிறது. அப்படி இரு கட்சி ஆட்சிமுறை கொண்டு வருவது என்றாலும் அது மாநில கட்சிகளை வெகுவாக பாதிக்கும் என்பதோடு, அப்படி செய்ய அரசியல் சாசனத்தில் இடம் இருக்கிறதா என்பது குறித்தும் எதிர்கட்சிகள் இப்போதே தீவிரமான ஆய்வில் ஈடுபட்டுள்ளன என அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது.