1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : புதன், 18 செப்டம்பர் 2019 (18:19 IST)

”எனது கருத்தை தவறாக புரிந்து கொண்டார்கள்”.. ஹிந்தி மொழி குறித்து அமித்ஷா விளக்கம்

இந்தியாவின் ஒரே மொழி ஹிந்தி மொழியாகத் தான் இருக்கவேண்டும் என்று அமித்ஷா கூறியதாக செய்திகள் வெளிவந்த நிலையில், ”எனது கருத்தை தவறாக புரிந்து கொண்டார்கள்” என அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் ஹிந்தி தினத்தன்று, உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது, டிவிட்டர் பக்கத்தில், இந்தியாவை உலக அளவில் அடையாளப்படுத்தும் மொழி ஹிந்தி மொழி தான் என்றும், இந்தியாவில் உள்ள அனைவரும் தனது தாய்மொழியுடன் ஹிந்தி மொழியையும் சேர்த்து கற்றுகொள்ள வேண்டும் என்றும் கூறியதாக செய்திகள் வெளிவந்தன.

அமித் ஷாவின் இந்த கருத்துகளை குறித்து பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தற்போது ஹிந்தி மொழி குறித்த தனது கருத்து பலராலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்று கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

”நானும் ஹிந்தி பேசாத மாநிலத்தை சேர்ந்தவன் தான். பிறமொழி ஒன்றை கற்க வேண்டுமானால், இந்தியை கற்றால் நன்றாக இருக்கும் என்று தான் கூறினேன்” என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.