ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : புதன், 18 செப்டம்பர் 2019 (12:43 IST)

தூங்கி கொண்டிருந்த குழந்தையை கடத்த முயன்ற நபர்..சிசிடிவி காட்சிகள்

வீட்டிற்கு வெளியே தூங்கி கொண்டிருந்த குழந்தையை ஒரு மர்ம நபர் கடத்த முயன்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், லூதியானா நகரின், ரிஷி நகர் பகுதியில் ஒரு வீட்டிற்கு வெளியே ஒரு குடும்பத்தினர் 4 வயது குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே டிரை சைக்கிளில் வந்த ஒரு மர்ம நபர், தூங்கி கொண்டிருந்த குழந்தையை கடத்தி செல்ல முயன்றார். ஏதோ சத்தம் கேட்கிறதே என விழித்த அக்குழந்தையின் தாய், தன் குழந்தையை ஒரு நபர் கடத்த முயன்றதை கண்டவுடன் கூச்சலிட்டார். உடனே அந்த நபரிடமிருந்து குழந்தையை மீட்டார்.

தாய் கூச்சலிட்டதை கண்டு விழித்த குடும்பத்தினர், அந்நபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த குழந்தையை கடத்த முயன்ற நபர் தப்பி ஓடினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் அந்த நபரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

source ANI