புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 24 மே 2020 (11:57 IST)

ரயில் நிலைய கடையில் தண்ணீர் பாட்டில்களை தூக்கி சென்ற புலம்பெயர்கள் தொழிலாளர்களால் அதிர்ச்சி

தண்ணீர் பாட்டில்களை தூக்கி சென்ற புலம்பெயர்கள் தொழிலாளர்களால் அதிர்ச்சி
உத்தரபிரதேசத்தில் ரயில் நிலையம் ஒன்றில் சுவரோரம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாடல்களை புலம்பெயர் தொழிலாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் செல்லும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் உணவு, தண்ணீர் வசதி எதுவும் இல்லை என்பதால் பயணிகள் கடும் ஆத்திரத்தில் இருந்தனர்.
 
இந்த நிலையில் இந்த சிறப்பு ரயில் ரயில் நிலையங்களில் நிற்கும்போது அதில் இருந்து இறங்கிய புலம்பெயர் தொழிலாளர்கள் பிளாட்பார கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த குடிநீர் பாட்டில்களை கூட்டம் கூட்டமாக வந்து எடுத்துச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சிறப்பு ரயில்களில் உணவு மற்றும் தண்ணீர் கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் இவ்வாறு ரயில் நிலையங்களில் உணவு மற்றும் குடிநீர் களை எடுத்துச் சொல்லும் சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதாகவும், இதனால் ரயில் நிலைய வியாபாரிகள் பெரும் நஷ்டம் அடைவதாகவும் செய்திக்ள் வெளிவந்துள்ளது. அதே நேரத்தில் சிறப்பு ரயில்களில் செல்லும் பயணிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் இந்த பிரச்சனை வராது என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்