1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 30 டிசம்பர் 2019 (20:05 IST)

ரயில் நிலையத்தில் இரு கால்களையும் இழந்த பெண் ! பரவலாகும் வீடியோ

சமீபத்தில், ரயியில் ஒரு வாலிபர் சாகசம் செய்கிறேன் என்றபடி ரயிலுக்கு வெளியே தலையைக் காட்டி நின்று கொண்டிருக்கும்போது, ஒரு கம்பம்  அடித்து, அவர் ரயிலில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இந்நிலையில், டெல்லியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள, நிஜாமுதின் ரயில் நிலையத்தில், ரயில் நகர்ந்து கொண்டிருக்கும்போது, ஒரு  இளம்பெண் கீழே இறங்க முயற்சி செய்தார். 
 
அப்போது, நிலை தடுமாறிய அவர், ரயிலுக்கும் பிளாட் பாரத்துக்கும் இடையில் சிக்கினார். இந்த விபத்தில் அந்தப் பெண் தனது இரண்டு கால்களையும் இழந்துள்ளார்.  அவர், தற்போது,டெல்லியில் உள்ள் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருதாக தகவல்கள் வெளியாகிறது.