ராஜஸ்தான் எம்.பி ஆகிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்

MANMOHANSINGH
Last Modified சனி, 10 ஆகஸ்ட் 2019 (14:49 IST)
ராஜஸ்தான் மாநிலங்களவை எம்.பி பதவிக்கு முன்னாள் பிரதமரும், நிதித்துறை அமைச்சருமான மன்மோகன் சிங் போட்டியிடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் பொருளாதார மேதை என அரசியல் வட்டாரங்களில் புகழப்படுபவர் மன்மோகன் சிங். உலக பங்கு சந்தை வீழ்ச்சியின்போதும் இந்தியா பொருளாதாரத்தில் வீழ்ந்துவிடாமல் இருந்ததற்கு மமோகன் சிங்கின் திறமையான வழிநடத்தலே காரணம் என சொல்பவர்களும் உண்டு. கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது இந்திய பிரதமராக பதவி வகித்தார் மன்மோகன்சிங். ஆனால் சோனியா காந்தியின் கைப்பாவையாக மன்மோகன் சிங் செயல்படுகிறார் என அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை பலர் முன்வைத்தனர்.

தற்போது ராஜஸ்தானின் மாநிலங்களவை எம்.பி பதவிக்கு போட்டியிடுகிறார் மன்மோகன் சிங். ஆகஸ்டு 13 அன்று இதற்கான மனுத்தாக்கல் செய்யப்போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :