புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (12:16 IST)

மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய கேரளா: வைரலாகும் வீடியோ

தென்மேற்கு பருவமழையால் இந்தியாவின் பல பகுதிகளில் விடாது கனமழை பெய்து வருகிறது. தற்போது கேரளாவின் பல பகுதிகளில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ராகுல்காந்தியின் மக்களவை தொகுதியான வயநாடு கடுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வயநாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்திருக்கும் வீடியோக்களும், வீடுகள் இடிந்துவிழும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

வயநாடு மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யவேண்டும் எனவும், மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் ராகுல் காந்தி மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.