விரைவில் மதமாற்ற தடுப்பு சட்டம்???- பாஜக அடுத்த அதிரடி

india
Last Modified சனி, 10 ஆகஸ்ட் 2019 (12:47 IST)
அடுத்த மக்களவை கூட்டத்தொடரில் மதமாற்ற தடை சட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யப்போவதாக வெளியான அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இரு அவைகளிலும் பிரச்சினைக்குரிய முத்தலாக் மசோதா, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்க மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்பட்டன. பல்வேறு கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி அவை நிறைவேற்றப்பட்டன. பிறகு மக்களிடம் தொலைக்காட்சி வழியாக பேசிய பிரதமர் அதன் அவசியங்களையும், நன்மைகளையும் எடுத்து உரைத்தார்.

எனினும் இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது, சிறுபான்மையினரை அரசு ஒடுக்குகிறது போன்ற கண்டனங்களை பலர் எழுப்பினர். இந்நிலையில் இந்தியா முழுவதற்குமான மதமாற்ற தடை சட்டத்தை அடுத்த கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது உண்மையாகும் பட்சத்தில் ஏற்பட போகும் பிரச்சினைகளுக்கு அரசு முன்னதாகவே தயாராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது மதமாற்ற தடைசட்டம் அருணாச்சல பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :