வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 10 ஆகஸ்ட் 2019 (11:57 IST)

கையில் ஈட்டியுடன் காட்டுக்குள் செல்லும் மோடி – Man Vs Wild Sneak Peak

உலக புகழ்பெற்ற Man Vs Wild பியர் கிரில்ஸுடன் இந்திய பிரமர் மோடி காட்டுக்குள் சென்று செய்த சாகஸம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதன் முன்னோட்ட காட்சிகள் வெளியாகி வைரலாகி உள்ளது.

டிஸ்கவரி சேனலின் உலக பிரசித்தி பெற்ற தொடர் Man Vs Wild. அந்த தொடரில் பியர் க்ரில்ஸ் என்ற நபர் ஆளரவமற்ற காட்டுக்குள் தனிநபராக சென்று அங்கு கிடைப்பவற்றை உண்டு உயிர்வாழ்ந்து தப்பித்து வருவார்.

உலகமெங்கும் புகழ்பெற்ற பியர் க்ரில்ஸ் தொடரில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். தேசிய புலிகள் தினத்தன்று இதன் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதேசமயம் புல்வாமா தாக்குதலின்போது இந்த படபிடிப்பு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.

ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் படமாக்கப்பட்டுள்ள இந்த தொடரின் முன்னோட்ட காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் பியர் க்ரில்ஸ் ஒரு ஈட்டியை ஏற்பாடு செய்து மோடியிடம் கொடுத்து புலிகள் வந்தால் நம்மை பாதுகாத்து கொள்ள இது உதவும் என கூறுகிறார்.

ஆனால் மோடி “உயிர்களை கொல்லும் பழக்கம் எங்கள் கலாச்சாரத்தில் இல்லை. என்றாலும் உங்களுக்காக இதை என் கையில் வைத்துக்கொள்கிறேன்” என்கிறார். பிறகு இருவரும் காட்டுக்குள் பயணிக்கும் காட்சிகள் இடம்பெறுகின்றன.

பிறகு ஆற்றங்கரையோரமாக தேநீர் அருந்தியபடி மோடியிடம் தூய்மை இந்தியா குறித்து பியர் க்ரில்ஸ் கேட்பது, அதற்கு மோடி பதிலளிப்பது போன்ற காட்சிகளும் இடம் பெறுகின்றன. இந்த முன்னோட்ட காட்சி வெளியான இரண்டு நாட்களிலேயே 2.3 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது.

இது முழுத்தொடராக ஆகஸ்டு 12ம் தேதி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்பட உள்ளது. இந்த வீடியோவுக்கு ஆதரவு இருக்கும் அதே சூழலில் நெட்டிசன்கள் பலர் கிண்டலடித்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.