ரூ.1000 கடனை 35 வருடங்கள் கழிச்சி தேடி வந்து கொடுத்த நபர்!.. இது செம மேட்டரு!..
இந்த காலத்தில் நெருங்கி பழகும் நபர்களிடம் கூட கொடுத்த கடனை திரும்ப பெறுவது என்பது கடினம். அல்லது கொடுக்காமலே கூட போய்விடுவார்கள். பணத்தால் பல நட்புகளும் உறவுகளும் பிரிந்திருக்கிறது. இந்த நிலையில்தான் 1991ம் வருடம் நண்பரிடம் வாங்கிய ஆயிரம் ரூபாய் கடனை 35 ஆண்டுகளுக்கு பிறகு 1200 கி.மீ பயணம் செய்து அவரின் குடும்பத்தை தேடி கண்டுபிடித்து ஒருவர் திருப்பி கொடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரளாவை சேர்ந்த இஸ்மாயில் 1990களில் வேலைக்காக சவுதி அரேபியா அரேபியாவுக்கு சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு பழக்கமானவர்தான் லட்சணா. அவரிடம் இஸ்மாயில் 120 ரியால் அதாவது இந்திய மதிப்பில் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். லட்சனா இந்தியாவுக்கு வந்தபின் இருவருக்கும் இடையே தொடர்பு இல்லாமல் போய்விட்டது.
அது நடந்து 35 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் நண்பரிடம் வாங்கிய ஆயிரம் ரூபாய் திருப்பிக் கொடுக்க வேண்டும் என எண்ணிய இஸ்மாயில் தேடுதல் வேட்டையில் இறங்கியிருக்கிறார். அவரின் செல்போன் எண், முகவரி என எந்த தகவலும் இஸ்மாயிலிடம் இல்லை. அவருக்கு நினைவில் இருந்த ஒன்று லட்சனாவின் சொந்த ஊர் தர்மபுரி என்பது மட்டும்தான்.
ஆனால் தர்மபுரியில் அவர் இல்லை. சமூகவலைத்தளங்கள் மூலம் லட்சணாவை தேடியிருக்கிறார். ஒருகட்டத்தில் சவுதியில் தன்னுடன் பணிபுரிந்த நண்பர்களின் தொடர்பு கிடைக்க, அவர்கள் மூலம் லட்சணா தற்போதும் சவுதியில் பணி புரிவதும், அவரின் குடும்பம் தெலுங்கானாவில் வசிப்பதும் தெரியவந்தது.
லட்சணாவின் செல்போண் எண் கிடைக்கவே, வாட்ஸ் அப் வீடியோ காலில் அவரிடம் இஸ்மாயில் பேசியிருக்கிறார். அதன்பின் தெலுங்கானா சென்று லட்சணாவின் குடும்பத்தினரிடம் ரூ.25 ஆயிரம் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டார். 1000 ரூபாய் வாங்கி 35 வருடங்கள் ஆன நிலையில் வட்டியாக 24 ஆயிரத்தை சேர்த்து அவர் கொடுத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இஸ்மாயிலின் நேர்மையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.