1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva

சவூதி அரேபிய வர்த்தக அமைச்சருடன் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் காணொளியில் பேச்சு.. முக்கிய ஆலோசனை

சவூதி அரேபிய வர்த்தக அமைச்சருடன் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் காணொளியில் பேச்சு.. முக்கிய ஆலோசனை
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், சவூதி அரேபிய வர்த்தக அமைச்சர் டாக்டர் மஜித் பின் அப்துல்லா அல் கசாபியுடன் காணொளி வாயிலாக ஒரு முக்கிய ஆலோசனையை நடத்தினார். 
 
மேற்கு ஆசியாவில் நிலவும் தற்போதைய சூழல்கள் குறித்து விவாதித்த இரு அமைச்சர்களும், வர்த்தக தொடர்ச்சியை உறுதி செய்வதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
 
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தம் இப்பகுதியில் நீடித்த அமைதிக்கும் பாதுகாப்புக்கும் வழிவகுக்கும் என்று கோயல் நம்பிக்கை தெரிவித்தார். மோதல்களுக்கு மத்தியிலும் வர்த்தகத்தை பராமரிப்பதில் சவூதி மக்களின் உறுதியான செயல்பாட்டை அவர் பாராட்டினார். 
 
மேலும், சவூதியில் தங்கியிருக்கும் இந்திய சமூகத்தை பாதுகாக்க அந்நாடு எடுத்து வரும் முயற்சிகளுக்கு அவர் தனது நன்றியை தெரிவித்தார்.  இந்தியா மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் விரைவான முன்னேற்றம் ஏற்படும் என்று இரு அமைச்சர்களும் நம்பிக்கை தெரிவித்தனர். 
 
சவூதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை கோயல் இதன்போது சுட்டிக்காட்டினார். இந்த சந்திப்பு இந்தியா - சவூதி அரேபியா இடையிலான பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்தது.
 
Edited by Siva