தொடர்புடைய செய்திகள்
- மோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்த பிரபல நடிகர்
- என் நண்பர்கள் இவர்கள்தான்…இவர்களுக்காக உழைக்கிறேன் – பிரதமர் மோடி
- கொரோனா தடுப்பூசி சான்றிதழ்… மோடியின் படத்தை நீக்கவேண்டும் – தேர்தல் ஆணையம் உத்தரவு!
- பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு இந்தியில் படமாகிறது...
- மேற்கு வங்க தேர்தலில் களமிறங்கும் 100 பெண்கள்! – மம்தா அறிவிப்பு!
பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் மோத தயார்: மம்தா பானர்ஜி சவால்
மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் இன்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அவர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று அதே கொல்கத்தாவில் மத்திய அரசுக்கு எதிராக மகளிர் பேரணி ஒன்றை முதல்வர் மம்தா பானர்ஜி நடத்திவருகிறார். தனது அரசின் கீழ் மேற்கு வங்கத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்று விமர்சிக்கும் மோடிக்கு பதிலடி கொடுத்த முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரப்பிரதேச மாநில பெண்கள் நிலை குறித்து நரேந்திர மோடி பேசுவாரா? அது குறித்து பேச அவர் தயார் என்றால் நேருக்கு நேராக மோத நானும் தயார் என்று சவால் விடுத்துள்ளார்
மேற்கு வங்க பெண்கள் பாதுகாப்பாக இல்லை என விமர்சிக்கும் மோடியிடம், உத்திரப்பிரதேச பெண்களின் நிலை குறித்து பேசுவாரா? என மம்தா பானர்ஜி ஆவேசமாக சவால் விடுத்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
