வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 5 மார்ச் 2021 (21:51 IST)

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு இந்தியில் படமாகிறது...

இந்திய சினிமாவில் பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கும் முயற்சிகள் அதிகரித்து வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை , தி அயர்ன் லேடி, தலைவி, குயின், என்ற பெயரில் பல இயக்குநர்க திரைப்படமாக எடுத்துள்ளனர். இதில் குயின் திரைப்படம் வெப் தொடராக வெளியாகி வெற்றிபெற்றுள்ளது. தலைவி படத்தில் ஜெ. வேடத்தில் கங்கனா நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த்சாமி நடித்துள்ளார்.

இந்நிலையில், இந்திய பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் இந்தியில் உருவாகவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இப்படத்திற்கு ஏக் அவுர் நரேன் என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை மிலன் பவுமிக் இயக்கவுள்ளார்.இப்படத்தில் மகபாரதத் தொடரில் தர்மர் கதாப்பாத்திரத்தில் நடித்த கஜேந்திர சவுஹான் நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது.