ஆண் - பெண் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ உரிமை உண்டு - உச்சநீதிமன்றம்
வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்த நந்தகுமார்(20) என்பரும், துஷாரா (20) என்ற பெண்ணும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்திய திருமணச் சட்டத்தின்படி துஷாராவுக்கு திருமண வயதான 18 வயது ஆகிவிட்டது. ஆனால், நந்தகுமார் திருமண 21 வயதை எட்டவில்லை.
இந்நிலையில் இத்திருமணத்தை எதிர்த்து, துஷாராவின் தந்தை கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், இத்திருமணம் செல்லாது என்றும், துஷாரா தனது தந்தையுடன் செல்ல வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இத்தீர்ப்பை எதிர்த்து நந்தகுமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நந்தகுமாரும், துஷாராவும் ‘மேஜர்’ என்பதால், அவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கான தகுதியை எட்டாவிட்டாலும் கூட திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ உரிமை உள்ளது.
மேலும் துஷாராவுக்கு தான் யாருடன் சேர்ந்து வாழ்வது என்று முடிவு செய்யும் உரிமை உண்டு என்றும். கேரள உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் உச்ச நீத்மனறம் உத்தரவிட்டது.