வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 3 மே 2018 (16:04 IST)

அப்போலோவில் ஜெ.வை நான் பார்க்கவில்லை - திவாகரன் வாக்குமூலம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தான் பார்க்கவில்லை என சசிகலாவின் சகோதரர் திவாரன் கூறியுள்ளார்.

 
அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா அதே 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.  அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. எனவே, அதுகுறித்து விசாரிக்க எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, ஓய்வு பெற்று நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது.  
 
இந்த விசாரணை ஆணையம் பல மாதங்களாக பலரையும் விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஜெ.விற்கு நீண்ட வருடங்களாக சிகிச்சை அளித்து வந்தவரும், சசிகலாவின் உறவினருமான மருத்துவர் சிவக்குமார் ஏற்கனவே  பலமுறை வாக்குமூலம் அளித்த நிலையில், நேற்று மீண்டும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். 
 
அப்போது, மருத்துவமனை கண்ணாடி வழியாக ஜெ.வை ஆளுநர் பார்த்தார். ஆனால், அவரை ஜெ. பார்க்கவில்லை. ஜெ.வுடன் சசிகலா மட்டுமே தினமும் இருந்தார். அமைச்சர் நிலோபர்கபில் மட்டுமே ஜெ.வை நெருக்கமாக பார்த்தார். காவிரி தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தின்போது ஜெ. மிகவும் உணர்ச்சிவசப்பட்டார் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
இந்நிலையி, திவாகரன் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அப்போது, மருத்துவமனையில் ஜெ. அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாட்களில் நான் 2 முறை மட்டுமே அங்கு சென்றேன். ஆனால், அவரை பார்க்கவில்லை. அவருடன் சசிகலா மட்டுமே இருந்தார். ஜெ. மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை. அது இயற்கை மரணம்தான் என தெரிவித்ததாக அவர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.