1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 6 மே 2018 (11:47 IST)

பெண்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்ய வேண்டும்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை மற்றும் லவ் ஜிகாத் போன்றவற்றை கட்டுப்படுத்த அவர்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று மத்தியப்பிரதேச மாநில பாஜக எம்.எல்.ஏ கோபால் பார்மர் கூறியுள்ளார்.
 
கடந்த சில ஆண்டுகளாகவே பாஜக பிரமுகர்கள் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து பின்னர் நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் தற்போது மத்தியப்பிரதேச பாஜக எம்.எல்.ஏ கோபால் பார்மர் அவர்கள் பெண்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைப்பது பெற்றோர்களுக்கு நல்லது என்று கூறியுள்ளார்.
 
 பெண்ணின் திருமண வயது 18 என்பது ஒரு நோய் என்று குறிப்பிட்ட கோபால், இந்த நோய் வந்தபின்னர் தான் பெண்கள் காதல் உள்பட பல சிக்கல்களில் மாட்டி கொள்வதாகவும், லவ் ஜிகாத் அதிகரிக்க தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.
 
முன்பெல்லாம் சிறுவயதில் பெண்கள் திருமணம் செய்ததால் கணவர் மற்றும் உறவினர்களின் பாதுகாப்பில் இருந்ததாகவும், அதனால் அவர்களுக்கு பாலியல் தொல்லைகள் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார். இவருடைய இந்த கருத்தால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.