நயன்தாராவின் பிரச்சனைக்கு சமந்தாவால் தீர்வு..
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் காதல் விவகாரம் அனைவருக்கும் தெரிந்ததே. இருவரும் மேடைகளில் ஒருவரை ஒருவர் புகழ்வது, வெளிநாட்டு ட்ரிப் அடிப்பதும் வழக்கமாக உள்ளது.
ஆனால், இருவரும் திருமணத்தை பற்றி வாய் திற்ப்பதாய் இல்லை. இதற்கு காரணம் நயன்தாராவின் பயன் என கூறப்படுகிறது. ஆம், திருமணம் செய்து கொண்டால், மார்கெட் இறங்கிவிடுமோ, பட வாய்ப்புகள் வராமல் போய்விடுமோ என்ர பயத்தில் திருமணத்தை தள்ளிபோடுகிறாராம்.
நயன்தாராவின் இந்த பிரச்சனைக்கு சமந்தா தீர்வாக வந்துள்ளார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் சமந்தாவுக்கு மார்க்கெட் இறங்கி விடவில்லை. அவரை தேடி புது பட வாய்ப்புகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
இது, நயன்தாராவுக்கு ஓரளவு தெம்பை கொடுத்து இருக்கிறதாம். எனவே விக்னேஷ் சிவனை நயன்தாரா மிக விரைவில் திருமணம் செய்வார் என தெரிகிறது.
ஆனாலும், தெலுங்கு சினிமாவின் பெரிய குடும்பத்தில் சமந்தா மருமகளாகியுள்ளார். அவர்கலது ஆதரவு இருப்பதால், அவருக்கு பட வாய்ப்புகள் வருகிறது. ஆனால், உங்களுக்கும் அப்படி நடக்குமா என தெரியாது என சிலர் நயன்தாராவின் காதை கடித்து வருகிறார்களாம்.