மராத்தி தெரியலனா லைசன்ஸ் கட்!.. ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்களுக்கு செக்!...
மகாராஷ்டிராவின் மாநில மொழி மராத்தி என்றாலும் அந்த மாநிலத்தில் ஹிந்தி பேசுபவர்கள் பலரும் வசிக்கிறார்கள். குறிப்பாக மகராஷ்டிராவின் தலைநகரான மும்பையில் ஹிந்தி பேசும் மக்கள் பலரும் வசிக்கிறார்கள். தற்போது மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
கடந்த சில வருடங்களாகவே மகராஷ்டிராவில் ஆட்டோ மற்றும் கார் ஓட்டுனர்கள் ஹிந்தியை விட்டுவிட்டு மராத்தி பேச வேண்டும் என்கிற குரல் ஓங்கி ஒலித்து வருகிறது.
இந்நிலையில், மராத்தி மொழி தெரியாத ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள் மீது இன்று முதல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மகாராஷ்டிரா அரசு அறிவித்திருக்கிறது. RTO அதிகாரிகள் நடத்தும் சோதனையில் மராத்தி தெரியாமல் தோல்வியடையும் ஓட்டுனர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, ஒரு மாதம் அவகாசம் தரப்படும். அதற்குள் மராத்தி கற்க தவறினால் உரிமம் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.