1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Madhya Pradesh bus accident

ஊரடங்கு எதிரொலி; குவிந்த பயணிகள் - மத்திய பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து!

National
டெல்லியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பலர் வெளியேறிய நிலையில் பேருந்து ஒன்று விபத்திற்கு உள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்கள் பகுதி நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் ஒரு வார காலம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கூலி தொழிலாளர்கள் உள்ளிட்டோர் சொந்த மாநிலங்களுக்கு செல்ல ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய பிரதேசம் குவாலியரில் கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் பயணித்த பேருந்து ஒன்று சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
கொரோனா அதிகம் பாதித்த 10 மாநிலங்கள்: உங்களுடைய மாநிலம் இதில் உள்ளதா?