இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா; தடுப்பூசி நிறுவனங்களுடன் பிரதமர் ஆலோசனை!

Prasanth Karthick| Last Modified செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (10:09 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இன்று தடுப்பூசி நிறுவனங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் முன்பு இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்து வருகின்றன. தினசரி பாதிப்புகள் 2 லட்சத்திற்கும் மேலாக அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்கள் பகுதி நேர மற்றும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் நாடு முழுவதும் உள்ள முக்கிய மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி மாலை 6 மணியளவில் முன்னணி மருந்து நிறுவனங்களுடனும் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு தடுப்பூசி நிறுவனங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். நாடு முழுவதும் மருத்துவம், மருந்துகள் மற்றும் தடுப்பூசி தடையில்லாமல் கிடைப்பதற்கான வழிமுறைகள் மற்றும் மருந்து உற்பத்தியை அதிகரித்தல் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :