1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (11:10 IST)

தடுப்பூசி போட்டுக்கிட்டா தக்காளி தருவோம்! – சத்தீஸ்கரில் நூதன முயற்சி!

சத்தீஸ்கரில் மக்களை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள செய்ய தக்காளி வழங்கப்பட்டு வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகள் ஊரடங்குகளை அறிவித்துள்ளதுடன், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியையும் வேகமாக மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் மக்களுக்கு தடுப்பூசி மீது உள்ள பயத்தால் ஊசி எடுத்துக் கொள்ள பலரும் தயங்கும் நிலை உள்ளது.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வித்தியாசமான சலுகையை வழங்கியுள்ளது நகராட்சி நிர்வாகம் . அதன்படி கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் அனைவருக்கும் ஒரு கிலோ தக்காளில் இலவசம் என கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கு மக்களிடையே வரவேற்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.