1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Speculation of Rebellion Grows as Shiv Sena UBT MPs Head to Delhi Amid Rift Rumors

ஒரு எம்பிக்கு ரூ.15 கோடி.. உத்தவ் தாக்கரே எம்பிக்களை விலைக்கு வாங்குகிறாரா ஏக்நாத் ஷிண்டே?

சிவசேனா பிளவு
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் மக்களவை எம்பிக்கள் சிலர், தங்களது தொலைபேசிகளை அணைத்து வைத்துள்ளதால் கட்சியில் குழப்பம் மற்றும் அதிருப்தி அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களின் எம்பிக்களை தக்கவைக்க உத்தவ் தாக்கரேவும் மற்ற மூத்த தலைவர்களும் தனிப்பட்ட முறையில் சமாதான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்நிலையில், உத்தவ் பிரிவை சேர்ந்த ஆறு எம்பிக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த எம்பிக்கள் டெல்லியில் ஸ்ரீகாந்த் ஷிண்டே இல்லத்தில் கூடி, ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், அதன் பின் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து தனிக்குழுவாக இயங்க அனுமதி கோரவுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இறுதியில் இந்த அதிருப்தி குழு ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுடன் இணைய திட்டமிட்டுள்ளது.
 
இதற்கிடையில், உத்தவ் தாக்கரேவின் தீவிர ஆதரவாளரான சஞ்சய் ராவத் இந்த செய்திகளை மறுத்துள்ளார். எம்பிக்கள் அனைவரும் உத்தவ் தாக்கரேவுடன் உறுதியாக இருப்பதாகவும், எம்பிக்களை விலைக்கு வாங்க தலா ரூ.15 கோடி முன்பணம் கொடுக்கப்படுவதாக தமக்கு அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆளுங்கட்சியின் இந்த "ஆபரேஷன் டைகர்" திட்டத்தை தங்களால் முறியடிக்க முடியும் என்று உத்தவ் தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
 
Edited by Siva