தொடர்புடைய செய்திகள்
- நீங்க நிஜ ஹீரோ இல்லை: பாசங்கு வேண்டாம்... மோடி மீது சித்தார்த் கடும் தாக்கு
- அமைதிக்கான நோபல் பரிசு : மோடிக்கா ? இம்ரான் கானுக்கா ?
- அபிநந்தன் பிடிபடவில்லை; மோடிதான் அனுப்பி வைத்தார் – நெட்டிசன்ஸ் ரவுசு !
- அதிமுக இனி மோடிமுக என அழைக்கப்படும்: கார்த்திக் சிதம்பரம்
- அரசை எப்படி நடத்துவது என்று எனக்குத் தெரியாது - பிரதமர் மோடி
வாயைவிட்டு மாட்டிக்கொண்ட மோடி: படாதபாடுபட்ட மொமெண்ட்!!!
நிகழ்ச்சி ஒன்றி கலந்துகொண்டு பேசிய மோடி கன்ஃபியூஷனில் கொச்சிக்கு பதிலாக கராச்சி என கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் தேசிய கட்சிகள் ஆங்காங்கே பொதுக்கூட்டங்களை நடத்தி மக்களை சந்தித்து வருகின்றன.
இந்நிலையில் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மோடி, ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டையை வைத்திருப்பவர்கள் இந்தியாவில் எங்கிருந்தாலும், எங்கு வேண்டுமானாலும் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
கொல்கத்தாவில் இருந்தாலும் சரி கராச்சியில் இருந்தாலும் சரி ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டையை வைத்திருப்பவர்கள் இலவச சிகிச்சை பெற முடியும் என்றார். இதைகேட்டதும், அந்த அரங்கமே அமைதியானது.
ஏனென்றால் மோடி கொல்கத்தாவில் இருந்தாலும் சரி கொச்சியில் இருந்தாலும் சரி என்று கூறுவதற்கு பதிலாக கொல்கத்தாவில் இருந்தாலும் சரி கராச்சியில் இருந்தாலும் சரி என கூறிவிட்டார்.
இதனை உணர்ந்த மோடி, உடனடியாக நான் கராச்சியை சொல்லவில்லை, கொச்சியை சொன்னேன் என்றார். என் சிந்தனை அனைத்தும், எதிரி நாடான பாகிஸ்தான் மீது உள்ளதால் தவறுதலாக பேசிவிட்டேன். அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என கூறினார்.
அடுத்த கட்டுரையில்
