அரசை எப்படி நடத்துவது என்று எனக்குத் தெரியாது - பிரதமர் மோடி
இந்தியாவில் உள்ள பிரபல வார சஞ்சிகையான இந்தியா டுடே நடத்திய கருத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டார் மோடி.
அப்போது அவர் பேசியதாவது:
நான் பிரதமராகப் பொறுப்பேற்ற போது மத்திய அரசை எப்படி வழி நடத்துவது என்று எனக்கு தெரியாது என்று மோடி தெரிவித்தார்.
ஆனால் அதுவரை ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் இந்த அரசை நடத்தி வந்ததாகவும் குற்றம் சாட்டினார். எனக்கு எந்த பின்புலனும் கிடையாது. கடந்தன் 55 வருடத்தில் இந்தியாவில் ஏற்படாத மாற்றம் கடைசி 55 மாதங்களில் நிகழ்ந்திருப்பதாக கூறினார்.
நம்மை யாரும் சாதாராணமாக நினைத்து விட முடியாது என்றபடி வியூகத்தை இந்தியா மாற்றியுள்ளது. தற்போது நம் நாட்டை உலக நாடுகள் புரிந்து வைத்திருகின்றன.
நம் இந்திய ராணுவத்தை பலத்தை சிலர் சந்தேகிக்கிறார்கள். அது தான் வேதனை அளிக்கிறது. நம் நாட்டில் யுத்தற்திற்கு ஒருபுறம் ஆதரித்து வரும் நிலையில் மற்றொரு புறம் இதற்கு சந்தேகம் எழுபுகின்றனர். இதனைத்தான் பாகிஸ்தான் ஊடகங்கள் நமக்கு எதிராகப் பயன்படுத்துகின்றன. எனவே நாட்டில் பாதுகாப்பு விவகாரங்களில் அரசியல் வேண்டாம் என்று கூறினார்.