வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 4 மார்ச் 2019 (20:17 IST)

அமைதிக்கான நோபல் பரிசு : மோடிக்கா ? இம்ரான் கானுக்கா ?

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா விமானிகள் பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து பாகிஸ்தான் விமானப்படையைச் சேர்ந்த 3 எஃப் - 16 ரக விமானங்கள் காஷ்மீரில் உள்ள ரஜோரி ராணுவ முகாமை தவிர்ப்பதற்காக இந்த விமானங்கள் எல்லைக்குள் வந்தன.
ஆனால் இந்திய விமானிகளின் சாதுர்யமான தாக்குதலில் பாகிஸ்தான் விமானிகள் திரும்பச் சென்று விட்டனர்.
 
இதனையடுத்து  நம் இந்திய விமானி அபிநந்தன் மைக் 21 ரக விமானத்தில் சென்று அதிலிருந்த ஏவுகணை மூலம் பாகிஸ்தானின் எஃப் - 16 ரக விமானத்தை சுட்டுவீழ்த்தினார்.
 
பதிலுக்கு  எதிர்தரப்பினர் தாக்குதல் நடத்தியதால் அபிநந்தன் பாகிஸ்தான் நாட்டுக்குள் பாராசூட்டின் மூலம் தரையிரங்கினார். 
 
அதன் பின்னர் அவரை  பாகிஸ்தான் சிறைப்பிடித்தது. பின்னர் இந்தியாவுடன் பல்வேறு நாடுகள் அபிநந்தனை விடுவிக்க வேண்டுமென பாகிஸ்தானுக்கு அழுத்தம் தரவே அவரை இந்தியாவுக்கு அனுப்பினர்.
 
ஆனால் இதற்கு இம்ரான் கானின் செயல் முக்கிய காரணமாக அமைந்தது. ‘
 
பாகிஸ்தான் பாரளுமன்றத்தில் ‘அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப்படை விமானி விடுவிக்கப்படுவார் ’என்று இம்ரான் கூறியிருந்தார்.
 
இதனையடுத்து இந்தியா ,பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்தும் உலக நாடுகளில் இருந்தும் இம்ரான் கானுக்குப் பாராட்டுகள் குவிந்தன.
 
இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு இம்ரான் கானுக்கு அளிக்கப்பட  வேண்டுமென்று பாகிஸ்தானில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன. சமூக வலைதளங்களிலும் கோரிக்கை விடுக்கப்படுகிறது.

 இதுகுறித்து இம்ரான்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
 
நோபல் பரிசு பெறும் அளவு எனக்குத் தகுதி இல்லை. காஷ்மீர் மக்களின் அமைதி மற்றும் துணைக்கண்டத்தில் யார் அமைதியை நிலைநாட்டுகிறார்களோ அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் மோடிக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள் . சமீபத்தில் கூட மோடி சியோலில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருதினை பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. 
 
இந்த விருதை இதற்கு முன்னர், ஐநா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலினா மெர்கல் ஆகியோர் இந்த விருதினை பெற்றுள்ளனர்.
 
இந்த விருதை பெற்ற மோடி :காந்தியின் போதனைகளின் அடிப்படையிலேயே எங்களின் பணிகளை தொடர்கிறோம். இந்த விருதின் மூலம் கிடைத்த நிதியை தூய்மை கங்கை பணிக்காக பயன்படுத்த உள்ளோம் என்றார்.
எனவே ஆசியாவில் இந்த வருடத்துக்கான நோபல் பரிசு இம்ரான் கானுக்காக வேண்டி  பாகிஸ்தான் மக்களும், மோடிக்கு நோபல் பரிசு வேண்டும் என இந்திய மக்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.