தொடர்புடைய செய்திகள்
- ஜனவரி 8ஆம் தேதி விடுமுறை எடுக்கக்கூடாது: தலைமை செயலாளர் உத்தரவால் பரபரப்பு
- பாகிஸ்தானை பற்றி பேசுவது ஏன் ? பிரதமர் மோடிக்கு மம்தா கேள்வி !
- ”எதிர்கட்சிகள் என்ன செய்தாலும் நாங்கள் பின் வாங்கப்போவதில்லை”.. அமித்ஷா கறார்
- ”சிஏஏ அச்சத்தினால் தான் அதிமுகவுக்கு ஓட்டு விழவில்லை” அன்வர் ராஜா ஓபன் டாக்
- மாநில அரசின் ஒத்துழைப்பு தேவையில்லை: குடியுரிமை சட்டம் குறித்த மத்திய அரசின் அதிரடி முடிவு
”நீங்கள் விரும்பினால் பாகிஸ்தான் போகலாம்” பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடும் முஸ்லிம்களை “விரும்பினால் பாகிஸ்தான் செல்லுங்கள்” என கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் என நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. குறிப்பாக மாணவ அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக எம்.எல்.ஏ சோம சேகர் ரெட்டி, ”நாங்கள் 80 சதவீதம், நீங்கள் வெறும் 18 சதவீகிதம் தான், நாங்கள் நடவடிக்கை எடுத்தால் என்ன நடக்கும் என நினைத்து பாருங்கள்” என இஸ்லாமியர்களை எச்சரித்துள்ளார்.
மேலும், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக நீங்கள் செல்ல விரும்பினால் பாகிஸ்தான் போகலாம், எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை” எனவும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
