புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 1 ஜனவரி 2020 (09:52 IST)

மாநில அரசின் ஒத்துழைப்பு தேவையில்லை: குடியுரிமை சட்டம் குறித்த மத்திய அரசின் அதிரடி முடிவு

சமீபத்தில் மத்திய அரசு அமல்படுத்திய குடியுரிமை சீருதிருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சிகளும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒருசில மாநில முதல்வர்கள் தங்களுடைய மாநிலங்களில் குடியிருப்பு சீருதிருத்த சட்டத்தை அமல்படுத்த போவதில்லை என்று கூறியிருப்பதால் மத்திய அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இல்லாமலேயே மத்திய அரசு இந்த குடியுரிமை சீருதிருத்த சட்டத்தை அமல் செய்ய ஒரு திட்டத்தை ஆலோசனை செய்து வருகிறது. இது குறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் இன்று பேசியதாவது:
 
‘பாதுகாப்பு, வெளியுறவு, ரெயில்வே, குடியுரிமை உள்ளிட்டவை மத்திய பட்டியலில் இருப்பதால் மத்திய அரசின் பட்டியலில் உள்ள சட்டத்தை அமல்படுத்துவற்கு மாநில அரசுகள் மறுக்க அதிகாரம் இல்லை. குடியுரிமை விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர்களுக்கு பதிலாக புதிய அதிகாரியை நியமனம் செய்ய பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
 
மேலும் குடியுரிமை சட்டத்திற்கான விண்ணப்ப நடைமுறை, ஆவணங்கள் பரிசீலனை, குடியுரிமை வழங்குதல் என ஒட்டுமொத்த நடைமுறையையும் இணையதளம் வாயிலாக மேற்கொள்ள ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. எனவே மாநில அரசு எதிர்த்தாலும் குடியுரிமை சட்டம் அமல் செய்யப்படும்’ என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.