திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : வெள்ளி, 3 ஜனவரி 2020 (14:03 IST)

”சிஏஏ அச்சத்தினால் தான் அதிமுகவுக்கு ஓட்டு விழவில்லை” அன்வர் ராஜா ஓபன் டாக்

குடியுரிமை சட்டத்திற்கு அதிமுக ஆதரித்ததினால் தான் சிறுபான்மையினர் அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை என அதிமுகவை சேர்ந்த அன்வர் ராஜா பேசியுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 27,30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி அதிமுகவை பின்னுக்கு தள்ளி திமுக முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுகவை சேர்ந்த அன்வர் ராஜா, ”குடியுரிமை சட்டத்தை அதிமுக ஆதரித்ததால் தான் சிறுபான்மையினர் வாக்களிக்கவில்லை. தேசிய குடியுரிமை பதிவேடு நாடு முழுவதும் அமலாகும் என்று சிறுபான்மையினர் அச்சப்படுகிறார்கள், ஆதலால் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த தனது முடிவை அதிமுக மறுபரிசீலனை செய்யும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் மாணவ அமைப்புகள் உட்பட பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், பாஜகவுடன் கைகோர்த்திருக்கும் அதிமுக இச்சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.