செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2020 (16:44 IST)

”எதிர்கட்சிகள் என்ன செய்தாலும் நாங்கள் பின் வாங்கப்போவதில்லை”.. அமித்ஷா கறார்

எதிர்கட்சிகள் ஓரணியில் வந்தாலும் குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் பின் வாங்கமாட்டோம் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாணவ அமைப்புகள், எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக சிறுபான்மையினர்கள் அதிகளவில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ”எதிர்கட்சிகள் ஓரணியில் வந்தாலும் குடியுரிமை சட்ட விவகாரத்தில் ஒரு அங்குலம் கூட பின் வாங்கப்போவதில்லை” உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், “எதிர்கட்சிகள் தாங்கள் விரும்பும் அளவுக்கு தவறான தகவல்களை பரப்பலாம்” எனவும் அமித் ஷா கூறியுள்ளார்.