ஆந்திர முதல்வரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? 5 ஆண்டுகளில் 41% அதிகரிப்பு..!
ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ரூ.529 கோடி சொத்து மதிப்பு இருப்பதாகவும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் அவரது சொத்து மதிப்பு 41% அதிகரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆந்திர மாநிலத்தில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் நடைபெறும் நிலையில் தற்போது வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் அதில் தனக்கு 529.50 மதிப்பு சொத்து மதிப்பு இருப்பதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு 41% உயர்ந்துள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அவரது 2022 -23 ஆம் ஆண்டில் மட்டும் அவரது ஆண்டு வருமானம் 50 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது மனைவியின் சொத்து மதிப்பு ரூ.176.30 கோடி என்றும் அவரிடம் 5.30 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் இருப்பதாகவும் மேலும் அவரது மனைவிக்கு பாரதி சிமெண்ட் சரஸ்வதி சிமெண்ட்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்களில் பங்குகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது
ஆந்திர முதல்வருக்கு ஐந்து ஆண்டுகளில் 41% சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva